Forum Hub

new Hub   Mobile   Latest Discussion  Register  FAQ  Contact Us

ennaval patri ennaval patri

Topic started by Yatchani (@ 202.138.120.37) on Wed May 26 23:32:54 EDT 2004.
All times in EST +10:30 for IST.

வாசற்படிக்கரையில் வட்ட நிலா
வண்டுக்கள் வட்டமிடும் இனிய பலா
கற்கண்டு தேகத்தில் பருவ விழா
காதலனை தேடியவள் கண்கள் உலா.

கண்டிப்பாய் அனிச்சமே அவள் பாதம்
கள்ளைவிட போதை தரும் தேகம்
நின்றாடும் தென்றலுக்கவள் தமிழ் ராகம்
நிச்சயமாய் அவளைச்சொல வேண்டும் பல மாதம்.

மார்மேலே மாராப்பு படர்ந்திருக்க
மலர் விழியோ மத்தாப்பாய் பொரி தெரிக்க
தெர் போலே அலங்காரம் தான் சிறக்க
தெவிட்டாத தேனை செவ்விதழ் கறக்க

நடை போட்டால் அன்னமே தோற்றிடும்
நகை செய்தால் நறுமணம் வீசிடும்
உடை வண்ணம் வானவில்லை மிஞ்சிடும்
உயிரெல்லாம் இவள் துணையைக் கெஞ்சிடும்.

யாட்சனி..........


Responses:


List all pages of this thread
  Tell your friend about this topic

Want to post a response?

Post a response:

Name:

E-mail:


Please Reload to see your response


Back to the Forum
new Hub   Mobile   Latest Discussion  Register  FAQ  Contact Us